ஈட்டிய லாபம், இழந்த ஊழியர்கள்..!! என்ன செய்கிறது இன்போசிஸ்..? 

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களை போல இன்போசிஸ் நிறுவனமும்  ஜூன் காலாண்டில் சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் குறைவான லாபத்தையும், வருமானத்தையும் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி கம்பெனி வரிசையில் இன்ஃபோசிஸ் முதல் இடம் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் வருடத்தில் 2வது காலாண்டில் ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து போது வெளியான தகவல் படி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிக அளவு எந்த ஐடி நிறுவனம் ஊழியர்களை வெளியேற்றியது என்று பார்க்கையில் அதில் முதலிடம் பிடித்துள்ள ஐடி கம்பெனி இன்ஃபோசிஸ் ஆகும். இங்கு ஊழியர்கள் வெளியேறும் அதிகபட்ச விகிதம் 28.4% ஆக உள்ளது. அதற்கடுத்ததாக, 23.8% பணியாளர்கள் வெளியேறிய  HCL டெக் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

23.3% விப்ரோ மற்றும் 19.7% TCS உடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதே போல, இன்ஃபோசிஸ் கடந்த காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்போசிஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் புதிதாக 21,171 ஊழியர்களை பணியில் சேர்த்து உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.