சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்..!! திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டதாக புகார்..!!

ட்விட்டர் வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து மஸ்க் பின்வாங்கி நிலையில் இருந்து  அவரின் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் விமான பணிப்பெண்ணிடம் மஸ்க் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

மஸ்கின் குழந்தை அவரிடமிருந்து வெளிப்படையாக விலகி வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் நியூராலிங்கில் பணிபுரிந்த ஒரு பெண் நிர்வாகியுடன் ஒரு குழந்தையை பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது. கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடன் எலான் மஸ்க் சிறிது காலம் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரின் மற்றும் ஷனஹன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததற்கு எலான் மஸ்க்  ஒரு காரணம் என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளார். பிரின் மற்றும் மஸ்க் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். 2008 நிதி நெருக்கடியின் போது டெஸ்லாவுக்கு பல ஆயிரம் அமெரிக்க டாலர்களை பிரின் வழங்கியுள்ளார் என தெரிவித்தார். 

இது தவிர மஸ்க்கிற்குச் சொந்தமான நிறுவனங்களில் தனது தனிப்பட்ட முதலீடுகளை விற்குமாறு பிரின் தனது நிதி ஆலோசகர்களை கேட்டுக் கொண்டார். எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு விற்கப்பட்டுள்ளது என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…