பல மில்லியன் டாலர் வருவாயை இழந்த ட்விட்டர் நிறுவனம்..!!  காரணம் என்ன..?

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க போவதாக அறிவித்த நிலையில் இருந்தே ட்விட்டர் நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், அந்த முடிவை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு காரணமாக வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக 1.18 பில்லியன் டாலராக குறைந்த நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 270 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.19 பில்லியன் டாலர்கள் இருந்த நிலையில்  இந்த காலாண்டில் 1.32 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால் எலான் மஸ்க்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கின் காரணமாக  அதன் வணிகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதைய நிலையில் ட்விட்டரில் ஒரு பங்கின் விலை 38.90 டாலர்களாக இருக்கிறது. இந்த சூழல் காரணமாக சுமார் 270 மில்லியன் டாலர்கள் வருவாயை இழந்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published.