ரூபாய் மதிப்பின் ஏற்றத்தாழ்வு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்படுகிறது – சக்திகாந்த தாஸ்

உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலையை  ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

பேங்க் ஆப் பரோடா ஆண்டுக் கருத்தரங்கில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மேடையில் பேசும் போது அமெரிக்க டாலருக்கு எதிரான மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சியை விட இந்திய ரூபாய் மதிப்பு வலுவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். 

ரூபாய் மதிப்பின் அதிக ஏற்றத்தாழ்வு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்படுவதாகவும் அதன் நடவடிக்கைகளால் மற்ற நாடுகளைவிட ரூபாய் வீழ்ச்சி கட்டுப்படுத்த படுவதாகவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

நாம் கொந்தளிப்பான காலங்களில் வாழ்கிறோம். ஐரோப்பாவில் தொடரும் போர் மற்றும் தொற்று நோய்கள் உலகளாவிய மேக்ரோ-பொருளாதாரக் கண்ணோட்டம் நிச்சயமற்ற தாக்கியுள்ளன. எதிர்பாராதவிதமாக உயர்ந்த பணவீக்கம், உணவுப் பணவீக்கம், விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் தேவை-விநியோக ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவை நாடுகள் எதிர்கொள்கின்றன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…