பெய்லியரில் முடிந்த முடி வளர்க்கும் ட்ரீமெட்மெண்ட்… நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Hair

ஒசூரில் தனியார் நிறுவன ஊழியர் முடி முளைப்பதற்கு மேற்க்கொண்ட சிகிச்சை தோல்வியடைந்ததால் பாதிக்கப்பட்ட நபருக்கு செலவுடன், இழப்பீட்டு தொகை வழங்க கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் வசித்து தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருபவர் ஸ்டாலின்(38). இவருக்கு தலையின் முன்பகுதியில் ஏற்ப்பட்ட வழுக்கை காரணமாக 2014 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள Advanced hair studio என்னும் பிரபல நிறுவனத்தில் ஸ்டாலின் அவர்கள் முடி வளர 4000 விதைகளை நடுவதற்காக 2,47,192 ரூபாய் செலவிட்டுள்ளார்.. 2 மாதங்கள் கழித்து முடி முளைத்த பிறகு அதற்கு 25ஆண்டுகள் வார்ரண்டி என தெரிவித்துள்ளனர்

ஆனால், நிறுவனம் தெரிவித்த கால அவகாசத்திற்குள் முடி முளைக்காததால் நிறுவனத்தை தொடர்புக்கொண்டபோது மீண்டும் விதையை நட்டு தருவதாக கூறியதால் அதிருப்தியடைந்த ஸ்டாலின் பலமுறை இழப்பீட்டை கேட்டு முறையிட்டும் கண்டுக்கொள்ளாததால் ஒசூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மூலம் கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றத்தில் மேற்க்கொண்ட வழக்கை 3பேர் கொண்ட நீதிபதி அமர்வு(ராஜா,முத்துலட்சுமி,வினோத்குமார்) ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

தீர்ப்பில், பாதிக்கப்பட்ட ஸ்டாலின் அவர்கள் செலவிட்ட 2,47,192 ரூபாய் பணத்தை திரும்ப தர வேண்டும் என்பதுடன் அவரின் மன உளைச்சலுக்காக 1,50,000 ரூபாயும், வழக்கு தொடர்ந்த செலவிற்காக 10000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள்,சினிமா நடிகர்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறிய நிறுவனத்திற்கு அபராதம் விதித்த சம்பவம் பலருக்கும் விழிப்புணர்வாக அமைய வேண்டுமென்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *