திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்… ஆடிப்போன ஆசிரியர்கள்!

Anbil mahesh

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் கல்லூரியில் வளர்ச்சி முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு திடீரென சென்று அங்குள்ள ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா என்றும் பள்ளியில் உள்ள கட்டமைப்பு மற்றும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஸ்மார்ட் வகுப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்தார்

மேலும் திடீரென பள்ளி கல்லூரி அமைச்சர் அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தது அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.