பிரதமர் பதவியேற்பு : நேரடி ஒளிபரப்புக்கு தடை?

இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சியால் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மக்கள், ராஜ்பக்சே குடும்பம் பதிவிலிருந்து விலக வேண்டும் என்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்சே உயிருக்கு பயந்து இலங்கையை விட்டு வெளியேறினார். இதையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. இத்தேர்தலில் மொத்த வாக்குகளான 225ல் 223 வாக்குகள் பதிவாகின. எம்பி.க்கள் ஜிஜி பொன்னம்பலம், செல்வராஜ கஜேந்திரம் வாக்களிக்கவில்லை. 4 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனால், 219 வாக்குகள் மட்டும் எண்ணப்பட்டது. 

Sri Lanka Crisis Highlights: Acting president Ranil Wickremesinghe declares  State of emergency in Sri Lanka.

இதில், ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளும், டல்லாஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுராகுமார திசநாயகே 3 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் இலங்கையின் 9வது அதிபராக ரணில் தேர்வு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் ரணில் ஆவர். இந்நிலையில் நேற்று இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமையில் அதிபராக பதவியேற்றார், ரணில். அவர் பதவியேற்பதை இலங்கை அரசு ஒளிபரப்பு நிறுவனமான ரூபவாகினி தொலைகாட்சியும், இதர தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத்துக்கு வந்த ரணிலுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த காட்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தபோது, திடீரென மின்தடை ஏற்பட்டது. 10 நிமிடம் மின்தடை நீடித்தது. மீண்டும் மின்சாரம் வருவதற்குள், பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து விட்டது. இதனால், நேரடி ஒளிப்பரப்பு தடைபட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *