செயல்படாத கல்குவாரியில் திடீர் ஆய்வு; வருமானத்துறை ரெய்டால் பரபரப்பு!

ஆண்டிபட்டி அருகே செயல்படாத கல்குவாரியில் தேனி வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சேடப்பட்டியில் ஆண்டிபட்டி வத்தலகுண்டு சாலையில் மதுரையை சேர்ந்த சரவணப்பெருமாள் , ராமு ஆகியோர்களுக்கு சொந்தமான ஆர்ஆர் கல்குவாரி உள்ளது . இக்குவாரி கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக செயல்படாமல் உள்ளது . இந்நிலையில் இன்று திடீரென தேனி மாவட்ட வருமான வரித்துறையினர் பத்திற்கும் மேற்பட்டோர் கல்குவாரியில் நுழைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .

தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வரும் வருமான வரித்துறையினர் கல்குவாரி அலுவலகத்தில் உள்ள பதிவேடு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்து பார்த்து வருகின்றனர் .

வருமான வரித்துறை திடீர் சோதனையை அடுத்து ஆண்டிபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . ஏற்கனவே இன்று மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வருமான வரித்துறையினரால் பல இடங்களில் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி கல்குவாரியில் நடைபெற்று வரும் திடீர் சோதனை ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Leave a Reply

Your email address will not be published.