காவல்துறை பயிற்சி ஆனது காலப்போக்கில் மாற்றப்பட வேண்டும் – அமித்ஷா

காவல் படை பயிற்சியில் தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களின் பயன்பாடு என்பது காலத்தின் தேவை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய காவல் பயிற்சி நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் மத்திய காவல் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய அமித்ஷா காவல் படை பயிற்சியில்  தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களின் பயன்பாடு என்பது காலத்தின் தேவையாக உள்ளது. இதை மனதில் கொண்டு அடிப்படை காவல் பணிகளில் கவனம் செலுத்தி அதனை மேலும் பலப்படுத்த உறுதி செய்யவேண்டும் என கூறினார். காவல்துறையினர் பயிற்சி ஆனது காலப்போக்கில் மாற்றப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. 

காவல் படைகளில் நவீன நுட்பங்களுடன் தேசபக்தி, உடற்தகுதி, சுய அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையும் வளர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட மிஷன் கர்மயோகி திட்டத்தின் ஆனது காவலர்களுக்கான முழுமையான பயிற்சி அணுகுமுறையுடன் நடத்தப்பட வேண்டும் என்றார்.  

Leave a Reply

Your email address will not be published.