காணாமல் போன இளைஞர் மர்மமான முறையில் மரணம்; நூற்பாலை மேற்கூரையில் கருகிய நிலையில் சடலம் மீட்பு!

death

சேலத்தில் ஐந்து நாட்களாக முன்பு காணாமல் போன இளைஞர் தனியார் நூற்பாலை அலுவலகத்தின் மேற் கூரையில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சேலம் மாநகரையொட்டி தாதம்பட்டி, காந்திநகர் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் தமிழரசன்(24). தந்தை இளங்கோ இறந்து விட்டதால் தாய் ராஜேஸ்வரியுடன் வளர்ந்து வந்தார். இவர் கூலி தொழில் செய்து வந்த தமிழரசன் கஞ்சா போதைக்கு அடிமையானவர். இதனால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார் . இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி மகன் காணாமல் போன நிலையில், இதுதொடர்பாக ராஜேஸ்வரி , வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தமிழரசனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சேலம் தாதம்பட்டி பகுதியில் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை அலுவலகத்தின் மேற்கூரையில் மின்சாரம் தாக்கப்பட்டு வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருப்பதாக ஆலை உரிமையாளர் சுரேந்தர் தெரிவித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அடிக்கடி
நூற்பாலையில் இரும்பு பொருட்களை திருடுவதற்கு இளைஞர்கள் வருவது உண்டு. இந்நிலையில் சம்பவத்தன்று தமிழரசன் இரும்பு ஏணியை திருடிச் செல்ல முயன்றபோது, ஏணி மின்கம்பத்தின் மீது மோதியதில் , மின்சாரம் தூக்கி வீசப்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்த தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உண்மையிலேயே திருடச் சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது கஞ்சா போதையின் போது ஏற்பட்ட தகராறு அடித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் ஊழியர்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் கடந்த நான்கு நாட்களாக இளைஞர் உயிரிழந்தது தெரியாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனிடையே இறந்து போன தமிழரசனுடன் நான்கு ஐந்து பேர் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் தமிழரசன் காணாமல் போன கடந்த மூன்று நாட்களாக அவர்களையும் காணவில்லை .
எனவே அவர்கள் மீது சந்தேகம் உள்ளது. போலீசார், அவர்களை பிடித்து விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published.