கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: வாட்ஸ்அப் குரூப் மூலம் வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது!

கள்ளக்குறிச்சி சின்னசேலம் பள்ளி மாணவி சாவு குறித்து தவறான வதந்திகளை பரப்பிய கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது போலீஸ் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர்சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த வாரம் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார் இது தொடர்பாக திண்டுக்கல்லை அடுத்துள்ள GTN கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் உதயகுமார் மற்றும் பார்வதி கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17வயதுடைய மற்றொரு கல்லூரி மாணவன் ஆகியோர் சேர்ந்து Justice ஸ்ரீமதி என whatsapp குழு அமைத்து இறந்த மாணவியின் புகைப்படத்தை whatsapp குழு டிபியில் வைத்துள்ளனர்

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பல வதந்திகளை பரப்பி வந்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலிசார் கல்லூரி மாணவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.