உடலை நல்லடக்கம் செய்யுங்கள்… கள்ளக்குறிச்சி மாணவி வீட்டில் ஓட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை முடிந்து விட்டது அவரது பிரேதத்தை நல்லடக்கம் செய்ய எடுத்து செல்லுமாறு கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் ஸ்ரீமதியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பர் அருகே பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை செய்வதற்கு பெற்றோர்கள் வராதால் இன்று மதியம் ஸ்ரீமதியின் வீட்டில் வேப்பூர் துணை வட்டாட்சியர் மஞ்சுளா வீட்டின் சுவரில் ஸ்ரீமதிக்கு இன்று மதியம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஒரு மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெறும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு பின்னர் அவர் தாத்தா ராமசாமிடம் நோட்டீஸ் கொடுத்து கையெழுத்து வாங்கிச் சென்றனர்.
பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மாலை ஸ்ரீமதிக்கு பிரேத பரிசோதனை மூன்று டாக்டர் கொண்ட குழு 3 மணி நேரம் அளவில் பிரேத பரிசோதனை செய்தனர் பின்னர் ஸ்ரீமதியின் பெற்றோர்கள் உடலை வாங்க வராத காரணத்தால் பிரேத பரிசோதனை முடிந்து விட்டது பிரேதத்தினை நல்லடக்கம் செய்ய பெற்றுக் கொள்ளும்படி காவல் ஆய்வாளர் குற்றப் பிரிவு குற்றபுலனாய்வுத் துறை திருவண்ணாமலை அவர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
அதனை கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜய பிரபாகரன் ஸ்ரீமதியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர் ஸ்ரீமதியின் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு கையெழுத்து வாங்கி சென்றனர்.