ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஜூன் மாதம் நடைபெற்ற 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18 ஆம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. 

உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக  எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

அரிசி, பருப்பு, கோதுமை போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை. அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம். லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை என  கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…