கிரிப்டோ கரன்சிக்கு விரைவில் தடை – நிர்மலா சீதாராமன்

கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ கரன்சி தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று விரும்புகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த கூட்டத் தொடர்களில் ஒன்றிய அரசு கிரிப்டோ கரன்சிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பாக நாடாளுமன்ற குழுக்களின் ஆலோசனைகள் நடைபெற்றது. ஆனால் இதுவரை அதில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காரணமாக தடை விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிப்பது இந்தியாவில் மட்டும் சாத்தியமில்லை. ஆனால் பல்வேறு நாடுகளில் இருந்து இணையதளம் மூலம் கிரிப்டோ கரன்சிகள் விற்கப்படுகின்றன.
அதனால் சர்வதேச ஒத்துழைப்புடன் அதற்கு சட்டம் இயற்றி தடை செய்ய வேண்டும் என்ற கருத்தையும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.