சர்ச்சைகளுக்கு பதில் அளித்த லலித் மோடி..!!  ஏற்றுக்கொள்ளாத இணையவாசிகள்..!!

ஐபிஎல் போட்டியின் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கும்  முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னுக்கு இடையேயான நட்பு குறித்து லலித் மோடி பதிலளித்துள்ளார். தனது முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லலித் மோடி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஏன் என்னை பற்றி தவறாக சித்தரிக்கப்படுகிறது என தெரியவில்லை. இப்போது நாங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். ஒருவேளை இருவருக்கும் இடையேயான புரிதல் நேர்மறையானதாக இருப்பின் எங்களுக்கு அதிசயம் நிகழலாம். அதேபோல என்னை நீங்கள் நாட்டை விட்டு தப்பியோடியவர் என்று குறிப்பிடுகிறார்கள்.

நீதிமன்றம் எப்போது என்னை குற்றவாளி என்று அடையாளப்படுத்தியது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். இந்தியாவில் தொழில் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல என்றும் லலித் மோடி விவரித்து உள்ளார். முன்னதாக லலித் மோடி இன்ஸ்டாவில், சுஷ்மிதா சென் தன்னுள் பாதி என்றும், தான் இன்னும் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சுஷ்மிதா சென்னும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, மோதிரம் மாற்றிக் கொள்ளவில்லை என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.