காவிரி வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 இளைஞர்கள்… தீயாய் வேலை செய்த தீயணைப்புத்துறையினர்!

மேட்டூர் அணை அருகே காவிரி ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய மூன்று இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி உயிருடன் மீட்டனர்……..

தண்ணீரின் அளவு அதிகமாக வருவதால் பொதுமக்கள் காவிரி கரையோரம் செல்லலாமல் இருக்க வேண்டும் , இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்…..
 
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து இன்று காலை முதலே உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் பதினாறு கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட நிலையில், மாலை 4 மணி அளவில் 92 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணையின் 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவதைக் காண காலை முதல் பொதுமக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவின், பிரபு , தினேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள், மேட்டூர் அனல்மின் நிலையம் சாலையின் அருகே சென்ற காவிரி வெள்ளத்தை பார்வையிட சென்றுள்ளனர்.

ஆற்றின் ஓரத்தில் இறங்கிய மூன்று இளைஞர்களும், ஆற்றின் நடு பகுதியில் இருந்த   பாறை ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிகப்படியான தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வந்ததால், அதனை சற்றும் எதிர்பாராத மூன்று பேரும் தண்ணீருக்கு நடுவில் சிக்கினர். இளைஞர்கள் மூன்று பேர் ஆற்றின் நடுப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் மற்றும் சிறப்பு காவல் படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தீயணைப்பு படை வீரர்கள் நீந்தி சென்று அவர்களை மீட்க முற்பட்டபோது, தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து கயிறை கட்டி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மீட்க முற்பட்டனர் அப்போதும் தண்ணீர் வேகம் அதிகரித்து இருந்ததால் இளைஞர்களை மீட்பதில் சிரமம் மேற்பட்டது . ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கடும் போராட்டத்திற்கு பின் , கயிறை தூக்கி இளைஞர்களிடம் வீசினர் .

பின்னர் அந்த கயிறினை இளைஞர்கள் இடுப்பில் கட்டிக் கொண்டனர். இதனை அடுத்து கயிற்றை லாவகமாக இழுத்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மூன்று பேரையும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் இந்த மீட்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினரை கோட்டாட்சியர் சரண்யா வெகுவாக பாராட்டினார். இச்சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…