சவுதி இளவரசர் கொலை செய்துள்ளார் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதிக்கு அரசு ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர் தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

அங்கு ஜோ பைடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது ஜமால் கஷோகி மரணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசுகையில் கஷோகியின் மரணத்திற்கு இளவரசர் சல்மான் காரணம் இல்லை என்று கூறுகிறார். உண்மையில் அவர்தான் கஷோகி கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்க புலனாய்வு துறை செய்த விசாரணையில் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை கண்டறிந்துள்ளது.ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980 களில் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியை தொடங்கியவர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியில் கட்டுரை எழுதி வந்தவர். மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *