வணிக வளாகத்தில் மத வழிபாடு வேண்டாம்..!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லுலு மால்..!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபல வணிக வளாகத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் லக்னோவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சிலர் மத வழிபாடு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் லுலு மால் நிர்வாகத்தினர் மத வழிபாட்டுக்கு தடை விதித்துள்ளனர். இந்த வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஊழியர்கள் திறந்தவெளியில் வழிபாடு செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்  மாலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல் பிற சமூகத்தினரும் பிரார்த்தனை செய்ய மால் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.  இந்த விவகாரம் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பிரபல வணிக வளாக நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், எந்த ஒரு மத வழிபாடும் வளாகத்தில் அனுமதிக்கப்படாது என்று அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…