நீலகிரியில் அமைச்சர்கள் முகாம்… வெள்ள பாதிப்பு குறித்து தீவிர ஆய்வு!

நீலகிரி மாவட்டம் தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் கடந்த 12 மற்றும் 13-ந்தேதிகளில் கன மழை கொட்டியது. அப்போது உதகை மற்று கூடலூரில் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கா.ராமசந்திரன், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து உதகை அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னதாகவே எடுத்த காரணத்தினால் நீலகிரியில் சேதம் குறைவாக உள்ளதாக கூறினார். சேதங்களை கண்டறியவும், சேதங்களை சரி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், உயிர் சேதங்களை தவிர்க்கவும், உரிய நிவாரண உதவிகளை வழங்க உத்தரிவிட்டுள்ளதாகவும் உடையும் அபாயம் உள்ள பாலங்களை கண்டறியவும் சிறிய பாலங்களை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருப்பதாக உள்ளது.

மழையின் காரணமாக ஒருவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு உரிய நிவாரணம் வழங்கபட்டுள்ளது. மண்சரிவு தான் அதிகமாக ஏற்பட்டுள்ளது. 163 மரங்கள் வெட்டபட்டதாகவும் அத்துடன் மழையால் விழுந்த 50 மரங்கள் வெட்டபட்டதாகவும் கூறினார்.

மழையால் ஒரு வீடு முழுவதுமாக இடிந்துள்ளதாகவும், 61 வீடு பாதி பாதிக்கபட்டுள்ளது அவற்றுக்கு உரியஇழப்பீடு வழங்கபடும் என்றார். சேதமடைந்த வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி தரபடும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.