உதகையில் பயங்கரம்… செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

உதகை அருகே கல்லட்டி ஆற்றில் செல்பி எடுத்த போது மென்பொறியாளர் தண்ணீரில் அடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தை சார்ந்த தேஜா(27) அவரது மனைவி வினித்தா சவுத்ரி(23) உள்பட 3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேர் இன்று காலை கல்லட்டி மலை பாதையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்து தங்கி உள்ளனர்.

அவர்கள் அனைவரும் மாலை 6.30 மணி அளவில் கல்லட்டி ஆற்றின் குறுக்கே அமைக்கபட்டுள்ள தற்காலிக பாலத்தின் மீது நின்று செல்பி எடுத்து கொண்டிருந்த போது வினித்தா சவுத்ரி ஆற்றினுள் தவறி விழுந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கல்லட்டி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் வினித்தா சவுத்ரி தவறி விழுந்ததால் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டார்.

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், உதகை தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தண்ணீரில் அடித்து செல்லபட்ட வினித்தா சவுத்ரியை நள்ளிரவு வரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் தேடும் பணியை கைவிட்டனர். இன்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதனிடையே தேஜா மற்றும் வினித்தா சவுத்ரி ஆகியோருக்கு திருமணம் ஆகி 11 மாதங்களே ஆகிறது என்றும் அவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதி விதிகளை மீறி செயல்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இதே பகுதியில் உள்ள வேறொரு தனியார் விடுதியில் தங்குவதற்காக கல்லட்டி மலைபாதையில் தடையை மீறி வந்த டெம்போ டிராவலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் சென்னையை சார்ந்த பெண் மென்பொறியளர் பலியான நிலையில் தற்போது பெங்களூரை சார்ந்த மென்பொறியாளர் தண்ணீரில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் குறித்து புதுந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…