10 கிலோ மீட்டருக்கு பழுதான மின் கம்பிகள்… நீலகிரியின் நிலை எப்போது சீராகும் – அமைச்சர் விளக்கம்!

நீலகிரி மாவட்டம் தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் கடந்த 12 மற்றும் 13-ந்தேதிகளில் கன மழை கொட்டியது. அப்போது உதகை மற்று கூடலூரில் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கா.ராமசந்திரன், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: நீலகிரி மாவட்டத்தில் மின் கம்பிகள் மீது விழும் நிலையில் இருந்த 1869 மரக்கிளைகள் வெட்டி அகற்றபட்டுள்ளதாகவும், 134 மின் கம்பங்கள் மாற்றபட்டுள்ளதாகவும் சாய்ந்த நிலையில் மற்றும் தாழ்வாக இருந்த மின் கம்பிகள் மாற்றபட்டுள்ளதாக கூறினார்.

10 கிலோ மீட்டருக்கு பழுதான மின் கம்பிகள் மாற்றபட்டுள்ளது. தற்போது 200 பேர் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். தேவைபட்டால் கூடுதல் பணியாளர்கள் கோவையிலிருந்து வரவழைக்கபடுவார்கள் என்றார்.

மேலும் தமிழகத்தில் ஒரு லட்சத்தி 15 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அதில் நீலகிரிக்கு 800 மின் கம்பங்கள் வழங்கப்படும் என்ற செந்தில் பாலாஜி அதற்கான உதிரி பாகங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் 11 நாட்கள் மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும் இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே 143 டாலருக்கு நிலக்கரி வாங்கபடுவதாகவும் தெரிவித்தார். மேலும் மாதந்தோறும் மின் அளவீடு செய்வதை ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் வரும் 5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் சொந்தமாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.