உல்லாசத்திற்கு தொடர்பு கொள்ளவும்… ஆசையுடன் கால் செய்த இளைஞருக்கு காத்திருந்த ஆப்பு… கல்லூரி இளைஞர்கள் கைது!

ஈரோட்டில், இணையதளத்தில் உல்லாசம் அனுபவிக்கலாம் என செல்போன் எண்ணை பதிவிட்டு அதன் மூலம் தொடர்பு கொண்ட இளைஞரை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்..

ஈரோட்டை சேர்ந்த கவிராஜ் என்ற இளைஞர் குறிப்பிட்ட இணையதளம் ஒன்றில் உல்லாசத்திற்கு தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டிருந்ததை நம்பி அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது போனை யாரும் எடுக்காத நிலையில், சிறிது நேரம் கழித்து அந்த எண்ணில் இருந்து இவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உல்லாசத்திற்கு அழைத்ததாக போலீசில் புகார் செய்து விடுவோம் என்று கவிராஜை மிரட்டி உள்ளனர். போலீசில் புகார் கூறாமல் இருக்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் பயந்து போன கவிராஜ் அவர்கள் கேட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து மறுநாள் மற்றொரு எண்ணில் இருந்து போலீசார் பேசுவதாக கூறி நபர் ஒருவர் பேசி இருக்கிறார். கவிராஜ் மீது புகார் வந்திருப்பதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டி உள்ளனர். இதனால் இரண்டாவது முறையாக மற்றொரு வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளார். இவ்வாறு இரு தவணைகளில் 64 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்..

இதன் பேரில், ஈரோடு சைபர் கிரைம் போலீசார், இணையதள முகவரியில் குறிப்பிட்ட செல் போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது மிரட்டலில் ஈடுபட்டு பணம் பறித்தது கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் என்பது தெரியவந்தது.

கோவையில் பதுங்கி இருந்த அவர்களை கைது செய்ய சென்ற போது இருவர் தப்பினர். மூன்று மாணவர்கள் பிடிபட்டனர். சபரி, மணி மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இதேபோல் இணைய தள முகவரியில் செல்போன் என்னை பதிவிட்டு உல்லாசத்திற்கு அழைத்து பல பேரிடம் பணம் கேட்டு மிரட்டியதும், இவ்வாறாக கிட்டத்தட்ட 6 மாதங்களில் இவர்கள் 4 லட்சம் ரூபாய் வரை பல பேரிடம் பணத்தை பறித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மூவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் இரண்டு கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…