வேந்தர் பதவியை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்

பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகிறது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறியுள்ளார்.புதுச்சேரியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று  தொடங்கி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன்  பள்ளி மாணவர்களுக்கு பேருந்து சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆளுநர் என்ற பதவியும் வேந்தர் என்ற பதவியும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்த அவர், காமராஜர் பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியது மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே தவிர அதை அரசியலாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனத் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.  

இதை தொடர்ந்து மதிய உணவு தந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…