குரங்கு அம்மை எதிரொலி: அறிகுறி மற்றும் தீர்வு!!

ஆப்ரிக்கா நாட்டில் தோன்றிய குரங்கு அம்மையானது பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 60 நாடுகளில் குரங்கு அம்மை நோய் மக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் முதல் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதன் படி, உடலில் சொறி மற்றும் கொப்புளங்களுடன் இளைஞர் ஒருவர் கேரளா மருத்துவ மனையில் சந்தேகத்தில் பேரில் அனுமதித்துள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக சில தினங்களுக்கு முன் ஐரோப்பாவில் இருந்து வந்ததாகவும், அவரது நண்பருக்கும் உறுதியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கேரளா திரும்பிய அவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவருடன் இருந்த உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருக்கின்றனர்.

இந்த சூழலில் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், பின்னர் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உடைமைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.