எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம்  தீர்வு காண வேண்டும் – தலாய் லாமா

இந்தியா – சீனா இடையே நிலவும் எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம்  தீர்வு காண வேண்டும் என திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். இன்று அவர் புத்த மதத்தவர்கள் அதிகம் வசிக்கும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சென்றார். லடாக் தலைநகர் லே வந்தடைந்த தலாய் லாமாவை, நூற்றுக்கணக்கான புத்த மதத்தவர்கள் பூக்களைத் தூவ உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் தலாய் லாமா நேற்று ஜம்மு வந்தபோது, அங்கும் நூற்றுக்கணக்கான லடாக் மக்கள் அவரை வரவேற்றனர்.அப்போது  சீனாவிடம் இருந்து திபெத்துக்கு சுதந்திரத்தை தான் கோரவில்லை என்று திபெத்தின் புத்த மத கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கில் தன்னாட்சியை கோருவதாகவும் விளக்கம் அளித்தார். 

பெரும்பாலான சீனர்கள், தலாய் லாமா ஒரு பிரிவினைவாதி என தற்போது எண்ணுவதில்லை என அவர் தெரிவித்தார். மேலும் லடாக் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சீனாவின் எல்லை விரிவாக்க கொள்கை குறித்து கேள்விக்கு  அதிக மக்கள்தொகை கொண்ட அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தலாய் லாமா அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published.