மக்களே உஷார்!! உங்கள் வங்கிக் கணக்கை நொடிப்பொழுதில் காலி செய்யும் ட்ரோஜன் மால்வேர்..

வளர்ந்து வரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப இணைய வாசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஹேக்கர்கள் மற்றவர்களின் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்கள் மற்றும் மால்வேர்களை பயன்படுத்தும் செயல்முறைகளும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது.

அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு உலகிற்கு அறிமுகமானது BRATA எனப்படும் ட்ரோஜன் மால்வேர். இந்த செயலி அடுத்தவர்களின் டிஸ்பிளேவை அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்துகொள்ளும் தன்மையை கொண்டுள்ளது. இவற்றின் மூலம் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை காலி முடியும் என கூறுகின்றனர் சைபர் கிரைம் போலீசார்.

இந்த செயலியானது தற்போது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது போலியான வாட்ஸ்அப் அப்டேட்டாகவோ செல்போனில் நுழைந்து விடுமாம். குறிப்பாக இந்த மால்வேரால் இதுவரையில் சூமார் 10 ஆயிரம் செல்போன்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இவற்றின் மூலம் வங்கி மற்றும் நிதித் தகவல்களை ஹேக் செய்யும் வகையில் வைரஸ் கொண்டிருப்பதால் தொலைபேசியிலிருந்து தரவை அழிப்பதுடன், ட்ரோஜனின் தடயத்தையும் அழித்தும் தன்மையைப்பெற்றுள்ளது. மேலும், இந்த மால்வேர் பயன்படுத்தி ஹேக்கர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டிவருவதாக கூறப்படுகிறது. அதோடு இவற்றை தடுக்க உங்களுடைய செல்போனில் வைரஸ் தடுப்பு மற்றும் ஆண்டிமால்வேர் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *