விவோ நிறுவனத்தை தொடர்ந்து ஒப்போ..!! வரி ஏய்ப்பில் சிக்கிய ஒப்போ நிறுவனம்..!!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ ரூ.4389 கோடி அளவுக்கு கஸ்டம்ஸ் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. ஒப்போ அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த சோதனையில் போலி ஆவணங்கள் மூலம் வரியை குறைத்து காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.சர்வதேச அளவில் ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி உள்ளிட்ட பிராண்ட்கள் மூலம் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வருகிறது ஒப்போ நிறுவனம். 

ராயல்டி மற்றும் லைசென்ஸ் கட்டணம் என்னும் பெயரில் பெரிய தொகையை சீனாவுக்கு ஒப்போ அனுப்பி இருக்கிறது. இந்த தொகையை பரிவர்த்தனையாக காண்பிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே 450 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறது. இன்னும் 3939 கோடி ரூபாய் பாக்கி தொகை செலுத்த வேண்டும் என தெரிகிறது.கடந்த வாரத்தில் விவோ நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விவோ நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவீதம் அளவுக்கு முறைகேடாக சீனாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

சீன நிறுவனங்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகின்றன. இதே போன்று பல நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு வரும் என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…