நீட் மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு… உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இணைய குறைபாட்டால், பதிவுசெய்ய இயலாமல் நிர்வாகப்பிரிவின் கீழ் மருத்துவ இடம் கிடைக்கப் பெறாத மாணவருக்கு 1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இணைய குறைபாட்டால், பதிவுசெய்ய இயலாமல் நிர்வாகப்பிரிவின் கீழ் மருத்துவ இடம் கிடைக்கப் பெறாத மாணவருக்கு 1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நீட் தேர்வில் 409 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் ஏதேனும் மருத்துவக் கல்லூரியில் நிர்வாகப்பிரிவின் கீழ் இடம் வழங்க உத்தரவிடக்கோரி லால்பகதூர் சாஸ்திரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,

“மனுதாரர் நீட் தேர்வில் 409 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், முதல் கட்ட கலந்தாய்வில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு 07.30 மணி அளவில் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில், இருந்து இரவு 10 மணிக்குள் பதிவு செய்யுமாறு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்ய இயலவில்லை.

குறைவான மதிப்பெண் பெற்ற பலரும், நிர்வாக பிரிவின் கீழ், மருத்துவ இடம் பெற்றுள்ளனர்.

அரசுத்தரப்பில் 2021-22ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் குக்கிராமத்திலிருந்து வந்துள்ளார். ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டு இருந்தால் இந்த சூழலில் தடுக்கப்பட்டிருக்கும். பதிவுசெய்யவும் போதிய காலம் வழங்கப்படவில்லை.

ஆகவே மருத்துவக்கல்வி இயக்குனரும், மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக்குழுவும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஒரு லட்ச ரூபாயை இழப்பீடாக 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இதுபோன்ற தவறு மீண்டுமொருமுறை நிகழாத வண்ணம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.