இனி இதுதான் கதி… மீனவர்களே உஷார்… மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி!

கடலூரில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட இரண்டு டன் மீன்களை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகள் பயன்படுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதோடு, மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட கடற்கரையில் போலீசார் உடன் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் ஏறேனும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை நிறுத்தி உள்ளார்களா? என்பதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இன்று மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதீன் தலைமையில் மீனவளத்துறை அதிகாரிகள. ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இந்த ரோந்துப்பணியின் போது கடலூர் அருகே உள்ள நல்லவாடு பகுதியில் மீன்வளத்துறையில் பதிவு பெற்ற இரண்டு நாட்டுப்படகுகளில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையினால் பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும் இந்த 2 நாட்டு படகுகள் சுருக்குமடி படகுகளுக்கு, மீன் பிடிக்க துணை போனதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட படகிலிருந்து சுமார் 2 டன் காணங்கத்தை வகை மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் ரூ.1,10,000-க்கு பொது ஏலம் விடப்பட்டது. அந்தத் தொகையை அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட சுருக்கு படி மீன் படகுகளுக்கு துணை போன ரெண்டு நாட்டு படுக்கைக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டு, படகு பதிவு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.