இறந்த பறவைகளை தேடி – ஃபேசன் சோ பூநாரைகள் பிண அறையில்

ஃபேசன் சோ பல வண்ணங்களில் விதவிதமான வடிவமைப்புகளுடனான உடைகளை உடுத்தி மேடைகளில் வளம் வருவது. ஆனால் இங்கு வெள்ளை மற்றும் இளஞெசிவப்பு நிறத்தில் (Pink) வண்ணமும், கொக்கி போன்ற அலகும், நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்ட பூநாரையின் நடனம் (நடை) ஃபேசன் சோ போன்றே ரம்மியமான காட்சியளிக்கும். மேலும் உப்பு நீரில் உள்ள பூஞ்சைகளை வடிகட்டி உணவாக உட்கொண்டு அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Florida's Long-Lost Wild Flamingos Were Hiding In Plain Sight | Colorado  Public Radio

இவை அதிகமாக குஜராத் மாநிலத்தில் காணலாம். குஜராத்-கட்ச் பாலைவனம் அல்லது ரண் ஆஃப் கட்ச் (Rann of Kutch) பகுதியை flamingo city என அழைக்கின்றனர். போர்பந்தர் பகுதியில் பிங்க் செலிபரேசன் (Pink Celebration) என்ற திருவிழாவை நடத்துகின்றனர். அந்த அளவிற்கு பூநாரைகள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து நமக்கு ரம்யமான காட்சியளிக்கின்றன.

இப்பகுதிக்கு அருகிலுள்ள ஜாம்நகர் மாவட்டத்தின் இயற்கை ஆர்வலர்கள், வனத்துறை சார்ந்த கால்நடை மருத்துவர்கள், தன்னார்வளர்கள் இணைந்து ஆய்வுமேற்கொள்ள அழைத்தனர். முதன் முறையாக வட மாநிலத்தில் அதுவும் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் மாவட்டத்திலிருந்து ஜாம்நகர் மாவட்டத்திற்கு பேருந்தில் இரவு நேரத்தில், தனியாக பயணித்தேன். கண்கள் மட்டுமே மூடியிருந்தது, மனது விழித்துக்கொண்டே இருந்தது.

The Great Rann of Kutch in the Thar Desert... - Secret World

காலை ஐந்து மணிக்கு ஜாம்நகர் பேருந்து நிலையம் சென்றடைந்ததும் தன்னார்வளர்களாக செயல்பட்டு வருபவர்களில் ஒருவர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் ஒரு பொறியாளர், அவர் மனைவி, இரு மகள்களில் ஒருவர் வெளிநாட்டிலும், ஒருவர் இங்கேயே பத்தாம் வகுப்பும் படித்து வந்தனர். பெரிய வசதியான வீடு என்பதால் நான் தங்குவதற்கு தனியறை கொடுத்தனர்.

குஜராத் சாய் (Chai) பின்பு குளித்து களப்பணிக்கு தயாரானவுடன் ரொட்டி, ஆலு (உருளைக்கிழங்கு) பராத்தா உண்டோம். அன்றுமட்டுமில்லை அங்கு தங்கியிருந்த நான்கு நாட்களும் குஜராத் ரொட்டி, ஆலு பராத்தா, குஜராத் அப்பளம் (Udad dal papad) தோக்லா போன்ற பல விதமான குஜராத் உணவுகளை தயார் செய்து கொடுத்தனர். இவை அனைத்தையும் ஏற்கனவே கடையில் வாங்கி சுவைத்திருந்தாலும் குஜராத் வீட்டிலேயே தயாரித்த குஜராத் பாரம்பரிய உணவை உண்பது இதுவே முதன் முறை. அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டே உண்டது புதிய அனுபவமாகவே இருந்தது. காலை சிற்றுண்டி முடித்துவிட்டு களப்பணிக்கு சென்றோம்.

Aloo Paratha Recipe (Aloo ka Paratha) » Dassana's Veg Recipes

முதன்முதலாக கால்நடை மருத்துவமனை, அஹமதாபாத் அளவிற்கு பெரிய அளவில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு இருந்தது. அங்கேயும் உத்ராயன் கொண்டாட்டத்தால் பாதிக்கபட்ட பறவைகள் சிகிச்சைக்கு வந்துகொண்டே இருந்தன. நாங்கள் ஒவ்வொன்றாக அவைகளின் நிலையை கவனித்துக்கொண்டிருக்கையில் அலைபேசியில் பறவைகள் மயங்கிக்கிடப்பதாக தகவல் வந்தது. உடனடியாக பொறியாளரின் வாகனத்தில் கிளம்பினோம். ஐந்து கிலோமீட்டருக்குள்ளிருந்த கிராமம். அருகில் நீர் நிலைகள், உப்பளங்கள், தொழிற்சாலைக் கழிவுகள் நுறையுடன் மாசடைந்த பகுதியாகவே இருந்தன.

பறவைகளை பார்த்ததும் பேர் அதிர்ச்சி, அங்கு மயங்கி கிடந்தது பூநாரை. நீர் நிலைகளில் அதன் அழகிய நடனத்தை மட்டுமே பார்த்து ரசித்திருந்த எங்களுக்கு அதை மயங்கிக் கிடந்ததை பார்க்கையில் இருந்த வேதனையை உணரவைக்க வார்த்தை இல்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். மருத்துவர் பரிசோதித்து, சிகிச்சையளித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணித்தார். ஆனால் சில நிமிடங்களில் உயிரிழந்தது.

The great flamingo debate is over. Birds are a native of Florida, science  says | wtsp.com

விசாரித்ததில் அதனுடைய இறப்பிற்குக் காரணம் பூச்சிக்கொல்லி என தெரியவந்தது. ஜாம்நகர் நகரம் விவசாய நிலம், வாய்க்கால், தொழிற்சாலை கழிவு, கடல் என அனைத்தும் அடுத்தடுத்த குறுகிய தொலைவிலேயே இருக்கிறது நில அமைப்பு.

மொத்தம் 1412.5 ஹெக்டரில் 875.7 ஹெக்டர் விவசாயம் செய்ய பயன்படுத்துகின்றனர். இதில் 59% கருப்பு மண் ஆதலால் முக்கியமாக 399 ஹெக்டர் நிலக்கடலையும், 144 ஹெக்டர் பருத்தி பயிரிடப்படுகிறது. இவை இரண்டில் பருத்தியே அதிகம் பூச்சிகளால் பாதிக்கப்படுவதால் அதிக பூச்சிக்கொல்லியும் தெளிக்கப்படுகிறது.

இலை நோய்க்கு நீரை பாய்ச்சி, நீரை திறந்துவிட்டு அம்மோனியாம் சல்ஃபேட் தெளிக்கப்படுவதால் ஓடும் நீரில் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. பருத்தி பாதிப்பில் 10% இளஞ்சிவப்புக் காய்ப்புழுவால் உண்டாகிறது. இது ஒரு பூச்சிக்கு மட்டுமே கிளோரோபியரிபோஸ், தியோடிகிராப், குயினால்பாஸ், ஃபென்வலரேட் மற்றும் சைபர்மெத்ரீன் ஆகிய ஐந்து விதமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த இந்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் பரிந்துரை செய்கிறது.

Flamingo Greater (Phoenicopterus roseus) killed by power line - Cape West  South Africa - World Bird Photos

இதனால் விவசாயிகள் பூச்சிக்கொல்லி வாங்கி அதிக பணத்தை செலவிடுகின்றனர். ஆனால் இத்தனை உழைப்பிற்கு பிறகும் உற்பத்தி மிகக் குறைந்த அளவில் இருப்பதால் கடன் அதிகரித்து பொருளாதாரத்தில் பாதிக்கப்படுவதால் தற்கொலை செய்கின்றனர். இதே பூச்சிக்கொல்லிகள் தான் மற்ற உயிரினங்களை பறிப்பதற்கும் காரணமாக அமைகின்றன. தற்போது அந்த ரம்யமான பூநாரை பிண அறையில் கிடத்தப்பட்டிருக்கிறது பிரேத பரிசோதைனைக்காக.

Leave a Reply

Your email address will not be published.