ஏடிஎம் கார்ட்டை வைத்து நூதன முறையில் திருட்டு; பிரபல ஏடிஎம் கொள்ளையன் சிக்கியது எப்படி?

திண்டிவனம் பகுதியில் ஏடிஎம் மையங்களில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் டிவி நகரை சேர்ந்தவர் சுப்பராயலு மகன் தேவேந்திரன். செருப்பு தைக்கும் கூலி தொழிலாளியான இவர், குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஏடிஎம்மில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பணம் எடுக்க சென்றார்.

அப்போது பணம் எடுக்கத் தெரியாததால் அருகில் இருந்த மர்ம நபரிடம் ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் எடுத்து தரும்படி தெரிவித்துள்ளார். அப்போது அந்த நபர் ஏடிஎம் மிஷினில் கார்டை போட்டு பணம் வரவில்லை என வேறு ஒரு கார்டை மாற்றி கொடுத்து அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் தேவேந்திரன் செல்போன் எண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல் திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நம்பிராஜன்(67), என்பவர் நேரு வீதியில் உள்ள ஏடிஎம்மில் மார்ச் மாதம் 28ம் தேதி பணம் எடுப்பதற்காக சென்றார்.

அப்போது அங்கு இருந்த நபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டு மாற்றி கொடுத்து அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் புதுச்சேரி சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்ததாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனை எடுத்து வங்கிக்கு சென்று வங்கி கணக்கை சோதனை செய்த போது ஏடிஎம்மில் 10 ஆயிரம் ரூபாய் என 5 முறை 50 ஆயிரம் ரூபாய் எடுத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக திண்டிவனம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் நேரு வீதியில் உள்ள ஏடிஎம்மில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் நவீன்(32) என்பதும், இவர் தேவேந்திரன் மற்றும் நம்பிராஜன் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் ஏடிஎம் கார்டு மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்த போலீசார், நவீன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…