தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு; 40 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள்

தென்மேற்கு பருவக்காற்று தனுஷ்கோடியில் 40 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றமாக உள்ளதால், 40 அடிக்கு மேலாக ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள். மணல்காற்று வீசுவதால் சுற்றிப்பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவக்கத்தால் வங்காளவிரிகுடா ஒட்டி உள்ள கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம் அரிச்சல்முனை, உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் அடைந்து தனுஷ்கோடி சாலைவரை தடுப்புகளை தாண்டி கடல் அலை வீசுகின்றன.

இதையடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில் உள்ள ஜட்டி பாலத்தில் கடல் அலைகள் மோதி 40 முதல் 50 அடிக்கு மேல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து காணப்படுகிறது. கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்கும் பணியில் கடலோர காவல்படை ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் மணல்காற்றும் அதிகமாக மழை போல் வீசுவதால் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகனங்களை விட்டு வெளியே வந்தால் மணல்காற்று வீசுவதால் இவ்வளவு தூரம் வந்து எங்களால் சுற்றிப்பார்க்க முடியவில்லை என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருத்தம்

புயல் காற்று வீசுவது போல் மண்ணுடன் சேர்ந்து மணல்காற்றும் வீசுகிறது. இந்நிலையில், ஆண்டு தோறும் ஆனி, ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவக் காற்று சீசனில் காற்று வீசுவது வழக்கம் இதனால் பலத்த காற்று வீசி வருகிறது.

மேலும் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் செல்வதோடு ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைக்கு அருகே சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.