இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் – இந்திய ரிசர்வ் வங்கி 

இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய போவதாக  இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இந்திய ரூபாயில் செய்து கொள்வதற்கான அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளது.  

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் விலை ஏற்றம் மற்றும்  பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களை கடந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடையும் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.45 ஆக வீழ்ச்சி கண்டது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இந்திய ரூபாயில் செய்து கொள்வதற்கான அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்தியா - ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..! |  RBI New rupee settlement mechanism allows India - Russia Trade with Rupee  (INR) - GoodReturns Tamil

இந்த நடவடிக்கை பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவது டன் சரியும் ரூபாய் மதிப்பு கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *