பாலியல் பிரச்சனை; சமையல் மாஸ்டரை அடித்துக் கொன்ற திருநங்கைகள் கைது!

கோவை துடியலூர் அருகே உணவக மாஸ்டரை அடித்துக் கொன்ற 5 திருநங்கைகள் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்(45). இவர் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
பாலியல் பிரச்சனை காரணமாக துடிலூர் அருகே வைத்து, திருநங்கைகள் தர்மலிங்கத்தை திருநங்கைகள் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார் ரேஸ்மிகா, கவுதமி, மம்தா, ஹரிநிதா, ரூபி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.