பெரம்பலூரில் நடந்த விதைத்திருவிழா… பலாப்பழத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பு!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதான பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்த திட்டங்களை அறிவித்து அரசும் விவசாயிகளுடன் சேர்ந்து பயணிப்பதால் வேளாண் விளை பொருள் பெருக்கமடைந்து மக்களை நேரடியாக சென்று சேர்ந்து வருவதாக பெரம்பலூரில் நடந்த விதைத்திருவிழாவில் விவசாயிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

பெரம்பலூர் அருகே வாலிகண்டாபுரம் கிராமத்தில் இயற்கை வேளாண் அமைப்பின் சார்பில் விதைப் பகிர்வு திருவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் போது மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய விழாக்குழுவினர் தொடர்ந்து வேளாண் தொடர்பான தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் இயற்கை வேளாண்மை, மரம் வளர்ப்பு, நஞ்சில்லா உணவு உற்பத்தி, மரபு விதை மீட்பு, சிறுதானிய உற்பத்தி. மாடித்தோட்டம் மற்றும் தர்ச்சார்பு வாழ்க்கை உள்ளிட்ட தலைப்புகளில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நாட்டு விதைகள், மரபு வகை நெல், கம்பு, வரகு, தினை உள்ளிட்ட அருந்தானியங்களில் தயாரான உணவு பண்டங்கள், மூலிகை மற்றும்சித்த மருத்துவ மருந்துகள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, கள்ளிமடையான், சீரக சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

விதை விழாவில் பங்கேற்ற கடலூர் மாவட்ட விவசாயி ஒருவர் பலாப்பழத்தை மதிப்பு கூட்டி தயாரித்திருந்த பலாப்பழ ஐஸ்கிரீம் மற்றும் பலாப்பழ ஹல்வா ஆகியவற்றை பார்வையாளர்கள் விரும்பி வாங்கி சுவைத்தனர், பலாப்பழம், பால், வெண்ணை இவற்றுடன் கடல்பாசி பவுடர் கொண்டு இரசாயண கலப்பின்றி முற்றிலும் இயற்கை முறையில் தயாரான ஐஸ்கிரீமை பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் .

Leave a Reply

Your email address will not be published.