தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – உடுமலை நாராயண கவி

பராசக்தியில் வரும் “கா,.. கா…”  பாட்டும்,  ரத்தக்கண்ணீர் படத்தில் வரும் “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்”  எனும் பாடலும் 1954ம் ஆண்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் தோறும் ஒலித்தன. இன்றும் காலத்தால் அழியாத இந்த பாடலை எழுதியவர் தான் “உடுமலை நாராயணகவி”.  இவர் தீவிர திராவிட இயக்க பற்றாளராக இருந்தார்.  

1899ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி எனும் பூளவாடி சிற்றூரில் கிருஷ்ணசாமி, முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும். . இளம் வயதிலேயே தம் தாய் தந்தையாரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றர். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். சுற்றுப்புற கிராமத்திற்கு தீப்பெட்டிகளை சுமந்து சென்று விற்றார். இதனால் ஒரு நாளைக்கு 25 பைசா வருமானம் கிடைத்தது. நான்காம் வகுப்போடு தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளை மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.

மதுரையில் நாராயணசாமி பல நாடகங்களுக்கு  உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். அதேசமயத்தில் தேசத்தில் சுதந்திர வேள்வித்தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்போது தன் பங்கான ஏராளமான தேசிய உணர்வு பாடல்களை எழுதி அன்றைய மேடையில் தோன்றும் முழங்க வைத்தார்.

இவர் மதுரையில் வாழ்ந்த போது அங்கு முகாமிட்டிருந்த டி. கே. எஸ் நாடக குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என். எஸ் கிருஷ்ணன் உடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கலைவாணர் தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், முதலிய திராவிட இயக்க தலைவர்களின் நட்பு கிடைத்தது . அதனால் திராவிடர் இயக்கப்படும் பகுத்தறிவு பார்வையும் உடுமலை நாராயணகவிக்கு கிடைத்தன. 

இயக்குனர் ஏ. நாராயணன் உடுமலை நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டு எழுதி தர வருமாறு சென்னைக்கு அழைத்தார். அதன் மூலம் திரைப்பட பாடல் உலகிலும் உடுமலை நாராயணகவி தன் முதல் அடியெடுத்து வைத்தார். உடுமலை நாராயணகவி முதன் முதலாக கவிதை எழுதிய திரைப்படம் “சந்திரமோகன்“ அல்லது சமூகத் தொண்டு ஆகும்.

திரைப் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம் - Cinemapluz

இவரின் திறமையை கண்டு “கவிராயர்” என திரையுலகத்தினர்அழைத்தனர். இவரிடம் பாடல்களை பெற அந்நாளில் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்.  அந்த சமயத்தில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனை விட அதிகமான பாடல்களை எழுதிய “நாராயணகவிராயர்” ஆவார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு இவரால் எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலமாக இருந்தது.

குழல் இன்னிசை !: நெஞ்சம் மறப்பதில்லை - "உடுமலை நாராயணகவி"

புதிய யுத்திகளை கையாண்ட நாராயணகவி உழைப்பாளர்களை பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் திரைப்படத்தில் அறிவை புகுத்தி மக்களை பண்பட வைத்தவர். நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்கு சொல்லி உலகை உயர்த்த பாடுபட்டவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் (தற்போது திருப்பூர் மாவட்டம்) உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைக்குரிய உடுமலை நாராயணகவி 23.5.1981 அன்று இயற்கை எய்தினார்.

உடுமலை நாராயணகவி - தமிழ் விக்கிப்பீடியா

1956 ஆம் ஆண்டு வெளியான “மதுரை வீரன்” படத்தில் உழைப்பவர்களுக்கு என பாடிய “சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்” போன்ற பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

 வேலைக்காரி , ஓர் இரவு , ராஜகுமாரி , நல்லதம்பி, பராசக்தி , மனோகரா, தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி , எங்கள் வீட்டு மகாலட்சுமி என பல வெற்றி படங்களில் பாடல்களை எழுதிப் புகழ் பெற்றார் . தமிழக அரசு  இவரை பெருமைப்படுத்தும் வகையில் “கலைமாமணி”  பட்டம்  கொடுத்தது .

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…