நேஷனல் ஹெரால்டு வழக்கில்..!! மீண்டும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் பங்குகளை , சோனியாவும், ராகுல் காந்தியும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு பங்குதாரர்களின் ஒப்புதல் பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து இருந்தது. 

சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை. இதையடுத்து சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று வழக்கு விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியது. இதனிடையே ராகுல் காந்தி 5 நாட்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். 

இந்நிலையில் வருகிற ஜூலை 21ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்குத்துறை சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…