ஆட்டோனா அப்படி இப்படி தான் இருக்கும்..!! உத்தரபிரதேசத்தில் ஆட்டோவில் பயணித்த 27 பேர்..!!

உத்தரபிரதேசத்தில் ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணித்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.  இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் அதிவேகமாக சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்தியதில் இதில் 27 பேர் பயணித்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய  செய்துள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலம் பதேபூர் அருகே பிந்தி கோட்வாலி என்னுமிடத்தில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக ஆட்டோ ஒன்று நிற்காமல் சென்றுள்ளது.

இதையடுத்து ஆட்டோவை துரத்தி சென்று, போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் பயணித்தவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்க கூறிய போது, 27 பேர் பயணித்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் என ஒவ்வொருவராக ஆட்டோவில் இருந்து இறங்குவதை போலீசார் எண்ணும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

விசாரணையில், நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாட தங்களது உயிரை பணயம் வைத்து சென்றுள்ளனர். இதையடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…