பிறந்தநாள் கொண்டாட்டம்: பிரபல யூடியூப் நபர் கைது..!!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய பிரபல யூடியூப் கவுரவ் தனேஜாவை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரபல யூடியூபர் கவுரவ் தனேஜா தனது பிறந்தநாளை கொண்டாட போவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இதில் அவரது ரசிகர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் 51 வது பிரிவில் யூடியூபர் கவுர தனேஜாவின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். யூடியூபரை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு சென்றனர். 

இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். மேலும், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கான டோக்கன்களும் ரயில் நிலையத்தில் கீழ் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தடை உத்தரவை மீறி செயல்பட்ட யூடியூபர் கவுரவ் தனேஜாவை போலீசார் காவலில் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.