90’ஸ் மிட்டாய்கள்; நாட்டுப்புறக் கலைகளுடன்… களைகட்டிய நெய்தல் திருவிழா!

நெய்தல் திருவிழா பிரபல நாட்டுப்புறப் பாடல்கள் ஆயிரக்கணக்கானோர் கண்டு களிப்பு, 90களில் பிறந்த குழந்தைகள் பயன்படுத்திய மிட்டாய் வகைகள் காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் ஏராளமானோர் வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர்

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் சார்பில் நெய்தல் கலை விழா கடந்த 7ம் தேதி தொடங்கியது.

இன்று மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் மகாமுனி குழுவினர் சக்கை குச்சி ஆட்டம், சகா குழுவின் கிராமிய நிகழ்ச்சி , கலைமாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு, காரமடை சுவாமிநாதன் குழுவினர், புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் ராஜலட்சுமி இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மனோ தங்கராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுக்களித்தனர்.

மேலும் நெய்தல் திருவிழாவை முன்னிட்டு 90களில் பிறந்த குழந்தைகள் பயன்படுத்திய மிட்டாய்கள் காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் ஏராளமானோர் பொரி உருண்டை, தேன் மிட்டாய், எள்ளு மிட்டாய், உரல் மிட்டாய், தேங்காய் மிட்டாய் என மிட்டாய்களை வாங்கி சுவைத்தும் சுத்து மிட்டாய் போன்ற மிட்டாய்களை வாங்கி விளையாடியும் மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…