தற்கொலையாக மாறிய கொலை… சினிமா பாணியில் நடந்த அவலம்; குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

கொலையை தற்கொலையாக மாற்றிய குற்றத்தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் திருச்செந்தூரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் குற்ற தடுப்புபிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலாஜி. இவர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டம் வத்திரயிருப்பு காவல் நிலையத்தில் குற்ற தடுப்புபிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 24ஆம் தேதி முதல் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் .

பின்னர் ஒரு சில தினங்களாக திருச்செந்தூரில் உள்ள கோவில் காவல் நிலையத்திற்கு குற்ற பிரிவு காவல் ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் பணியமர்த்த பட்டு பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் பாலாஜியை திடிரென பணியிடை நீக்கம். செய்து மாவட்ட காவல்
துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் பின்னணி விவரங்கள் குறித்து விசாரிக்கையில், கிடைத்த தகவலானது,

கடந்த 2019ஆம் ஆண்டின் போது விருதுநகர் மாவட்ட த்தில் குற்ற தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலாஜி . ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முக்குளம் பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த காளி ராஜன் என்பவர் கொலை செய்ய பட்டதாகவும் அதனை இவர் முறையாக விசாரிக்காமல் குற்றவாளிகளுடன் இணைந்து சேகரித்து வைத்திருந்த தடயங்கள் முழுவதையும் அழித்து விட்டு இச்சம்பவத்தை காவல் நிலையத்தில் தற்கொலை என்று பதிவேற்றம் செய்து வழக்கை முடித்துள்ளார்

மேலும் சில மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் குறித்து மறு ஆய்வு செய்கையில் குற்றவாளிகளுக்கு சாதமாக காவல் அதிகாரி கொலையை தற்கொலை என மாற்றியதால் ஒரு சில தினங்களாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் குற்ற குற்றத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலாஜி தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published.