சிறுமியின் 24 வார கருவை கலைக்க உத்தரவு; வாட்ஸ்அப் வீடியோ காலில் நடந்த விசாரணை!

சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க உத்தரவிட கோரிய வழக்கில் மருத்துவ அவசரத்தை கருத்தில் கொண்டு whatsapp வீடியோ காலில் மருத்துவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி. உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றி 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒருவர் தனது மகளின் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது .

மனு விசாரணையில் சிறுமியை ஏமாற்றி ஒருவர் கர்ப்பம் ஆக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவு வழங்குமாறு மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை வாட்ஸப் வீடியோ காலில் தொடர்பு கொண்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சிறுமியின் 24 வாரம் கர்ப்பத்தை கலைப்பதற்கு சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டு அறிந்தார் சிறுமியின் உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்தில் கணக்கில் கொண்டு கர்ப்பத்தை கலைக்க முடியும் என மருத்துவக் கல்லூரி மருத்துவர் கூறியதை தொடர்ந்து

நீதிபதி மாணவியின் விருப்பத்திற்கு ஏற்ப விரைவில் இந்த கர்ப்பத்தை கலைக்க போதுமான மருத்துவ துறை நிபுணர், உரிய மருத்தவ வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.