கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்ன மொசக்குட்டி… உன் முகத்துல நேற்று இல்லாத மாற்றம் என்னது?”

“என்ன சித்தப்பு நக்கலா? முகத்துல அடிபட்டுடுச்சுய்யா!”

“அடிபட்டுடுச்சா? யாராவது அடிச்சுட்டாய்ங்களா? எதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேனே!”

“உனக்கும் தெரிஞ்சுபோச்சா? ஒரு அதிமுக அனுதாபி ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருக்கப்ப தகராறாகிப்போச்சு சித்தப்பு! அதான் இப்டி…”

“ஏண்டா மொசக்குட்டி… நாம அரசியல் பேசுறது சரி… நமக்குள்ள ஒரு பழக்கம் இருக்கு… அதிமுககாரன்கிட்ட அப்டி என்னத்த பேசி அடிவாங்குன?”

“நல்லபடியா தான் பேசிட்டு இருந்தோம் சித்தப்பு… ஒரு கட்டத்துல, ‘என்ன இருந்தாலும் உங்க தலைவி ஒரு அக்யூஸ்ட்டு தான!’ன்னு சொல்லிட்டேன்… உண்மையத்தான சொன்னேன்… ஆனா பொசுக்குன்னு கோவமாகி அறைஞ்சுட்டான் சித்தப்பு!”

“இதுக்குத்தான் யார்ட்ட என்ன பேசணும்னு பார்த்துப் பேசணும்கறது… இதுவே பிஜேபிக்காரங்க கிட்ட உங்க மோடி, அமித்ஷாலாம் அக்யூஸ்ட்டுன்னு சொல்லிப்பாரு… சந்தோசமா சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க… அதெல்லாம் அவங்களுக்கு பெருமையான விஷயம்… அதான ராதாரவி அப்டி பேசியிருக்காரு!”

மோடிஜி, அமித்ஷா 2 பேரும் இந்தியாவின் பெரிய அக்யூஸ்டுகள்”: பாஜக கூட்டத்தில்  உண்மையை போட்டுடைத்த ராதாரவி!

“ராதாரவி அப்டி என்ன பேசிட்டாரு சித்தப்பு?”

திமுக ஆட்சிக்கு எதிரா தமிழக பாஜக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துச்சு. அதுல கலந்துக்க வந்த ராதாரவி பேசுறப்ப… எங்க கட்சியில ரெண்டு மோசமான அக்யூஸ்ட்டுங்க இருக்காங்க… அக்யூஸ்ட் நம்பர் 1 மோடி, இன்னொரு அக்யூஸ்ட் அமித்ஷா… ரெண்டு பேருமே மோசமானவங்க… எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் கருவறுத்துடுவாங்கன்னு பேசியிருக்காரு!

“அடக்கொடுமையே! இந்தியாவுலயே… ஏன் வேர்ல்டுலயே தன்னோட கட்சித்தலைவரை அக்யூஸ்ட்டுன்னு… குற்றவாளின்னு பெருமையா சொல்லிக்கிட்ட ஒரே கட்சி பிஜேபியாத்தான் இருக்கும்போல சித்தப்பு!”

“ஆமான்டா சித்தப்பு… அதுமட்டுமா? உண்ணாவிரதப் போராட்டம்னு அறிவிச்சுட்டு, மத்தியானம் 11.30 மணிவாக்குல வந்து கொஞ்ச நேரம் உக்காந்துட்டு பேசிட்டு கிளம்புன ஒரே தலைவர் அண்ணாமலையாத்தான்டா இருக்கும்!”

“என்னது, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மத்தியானத்துல வந்தாரா? ஓ… மத்தியானம் மட்டும் விரதம்னு இருப்பாங்களே… அதுபோல இருக்கும்போல!”

“அதேதான் மொசக்குட்டி… உனக்கும் அதிமுககாரருக்கும் பிரச்சனைன்னதும் எதோ ஓபிஎஸ் ஈபிஎஸ் பிரச்சனைல சிக்கித்தான் உன்னைய அடி பின்னிட்டாய்ங்களோன்னு நினைச்சேன்!”

“அதான சித்தப்பு… ஒரு பக்கம் நீதிமன்றத்துல முட்டி மோதிக்கிட்டு இருக்காங்க… இன்னொரு பக்கம் கல்யாண மண்டபத்துல ஆலோசனைக்கூட்டம்னு போட்டு சேரைத்தூக்கி அடிச்சு சண்டை போட்டிருக்காங்க… செம ரகளையா இருந்திருக்கு!”

“அதான் அரசியல் மொசக்குட்டி! மேல்மட்டத்துல இருக்குற தலைவர்கள் நீதிமன்றத்துல மோதிக்குவாங்க… அதே நேரம் கீழ்மட்டத்துல இருக்குற நிர்வாகிகள் தொண்டர்கள்லாம் இப்டி நேருக்கு நேர் அடிச்சுப் புரண்டு சண்டை போட்டுக்குவாங்க!”

“ஏன் சித்தப்பு… இப்ப அதிமுகவுக்கு போதாத காலம் போல… இருக்குற பிரச்சனை போதாதுன்னு ரெய்டு வேற நடந்திருக்கு போல!”

இதுல ஒரு விஷயம் பார்த்தியா… மத்திய அரசும் ரெய்டு நடத்தியிருக்கு… மாநில அரசும் ரெய்டு நடத்தியிருக்கு… ரெண்டு பேரும் சேர்ந்தே எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி பினாமி இடங்களிலெல்லாம் ரெய்டு நடத்தியிருக்காங்க!

“அதான் சொத்தப்பு ஆச்சர்யமா இருக்கு… ரெண்டு தரப்பும் ஏன் ஒரே நேரத்துல அதிமுகவ குறி வைக்கிறாங்க?”

“போன பொதுக்குழுவுல எடப்பாடிக்கு கூடுன கூட்டம் இருக்குல்ல… அத்தன கூட்டத்தையும், தலைக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு குடுத்துத்தான் கூட்டியிருக்காங்க… அதுக்கு முழுக்க எடப்பாடி, வேலுமணியோட பினாமிங்க தான் கரன்ஸிய அவுத்துவிட்டிருக்காங்க… அதான் அடுத்த பொதுக்குழுவுக்கும் எப்படியும் பணத்தை அவுத்துவிடுவாங்கன்னு மோப்பம் பிடிச்சு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்திருக்கு!”

“அப்புறம் மத்திய அரசோட ரெய்டு எதுக்காம் சித்தப்பு?”

“இப்ப அதிமுகவோட ஆட்டத்தைப் பார்த்தால் எடப்பாடியோட கை தான் ஓங்குற மாதிரி இருக்கு. அதுக்கேத்தாப்புல துட்டு ரொம்பவே புழங்குது. எடப்பாடி தலைமைக்கு சாதகமாத்தான் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருக்குது. அதான் ஒருவேளை எடப்பாடியே அதிமுக தலைமைக்கு வந்துட்டா… மேலருக்க ஓனர் மோடிய மறந்துடக்கூடாதுல்ல… அதுக்கு செக் வைக்கத்தான் மத்திய அரசோட ரெய்டு நடந்திருக்காம்!”

Dists should enforce strict guidelines: Chief Minister Edappadi K  Palaniswami || Dists should enforce strict guidelines: Chief Minister  Edappadi K Palaniswami

“இதுல ஒரு கூத்தைப் பாருங்க சித்தப்பு… மத்திய அரசு ரெய்டு பண்ணினப்ப கம்முன்னு இருந்த அதிமுக தலைவர்கள், மாநில அரசோட ரெய்டை மட்டும் கண்டிச்சு அறிக்கை ஆர்ப்பாட்டம்னு பண்ணிட்டு இருக்காங்க!”

“பின்ன, என்னதான் இருந்தாலும் ராஜவிசுவாசம் ரொம்ப முக்கியம்ல!”

“ராஜவிசுவாசம்னு சொன்னதும் தான் கேக்கத் தோணுது… பொன்னியின் செல்வன் படத்தோட டீசர் வந்திருக்கு பார்த்தீங்களா சித்தப்பு?”

“அடப்போடா… கல்கி எழுதுன கதைல நந்தினி.. குந்தவைலாம் எம்புட்டு அழகு தெரியுமா? ஒவ்வொரு கேரக்டரும் அம்புட்டு அம்சமா இருக்கும்… ஆனால் படத்தோட டீசர் பார்த்தப்ப ஏமாத்தமாத்தான் இருக்குடா மொசக்குட்டி!”

“அடப்போங்க சித்தப்பு! நான்லாம் நாவலே படிக்கல… எனக்கு இந்த டீசர் புடிச்சிருக்கு! நீங்க சரியான பூமர் அங்கிள்! ஹஹஹ!”

  • புத்தன்

Leave a Reply

Your email address will not be published.