கவுதம் அதானியின் அடுத்த நகர்வு..!!  என்ன செய்யப்போகிறது ஜியோ..!!

இந்தியாவின் பெரும் பணக்காரராக விளங்கும் கௌதம் அதானி ஜூலை 26ஆம் தேதி நடக்க இருக்கும் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்து கொள்ள போகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உடன் கௌதம் அதானி மட்டும் அல்லாமல் 5ஜி சேவை அளிக்கக் கூடிய நிறுவனங்களும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Adani May Join The Telecom Spectrum Race And Compete With Reliance Jio,  Airtel, Vi 2022

இதுவரை 4 நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கு பெற விண்ணப்பம் செய்துள்ளது. தற்போது இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 வதாக அதானி குழுமம் விண்ணப்பித்து உள்ளது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது.

India Inc pledges over Rs 1 lakh crore over next 3-5 years in Uttar Pradesh  - The Hindu BusinessLine

அதானி குழுமத்துடன் தேசிய மற்றும் சர்வதேச போக்குவரத்து சேவைக்கான உரிமம் உள்ளது. இந்நிலையில் ஸ்பெக்டரம் ஏலத்தில் விண்ணப்பம் செய்யப்பட்ட 4வது நிறுவனம் அதானி குழுமம் தான் என்பதை இக்குழுமம் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது.

ஏற்கவே அம்பானியின் ஜியோ வருகையால் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளது, இந்நிலையில் அதானி வருகையால் மீதமுள்ள ஏர்டெல், வோடபோன் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *