பின்வாங்கிய எலான் மஸ்க்..!!  வழக்கு தொடர தயாராகும் ட்விட்டர் நிறுவனம்..!!

உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க போவதாக சில வாரங்கள் முன் அறிவித்தார். 

ட்விட்டர் நிர்வாகம் மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் ட்விட்டரில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை சரியாக தெரிவிக்க வேண்டும் என்றும் போலிக் கணக்குகள் 5 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே ட்விட்டரை வாங்குவேன் என்று எலான் மஸ்க் ட்விட்டர் உடனான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில்  தற்போது ட்விட்டர் உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எலான் மஸ்க். போலி கணக்குகள் பற்றிய தகவல்களை ட்விட்டர் வழங்கத் தவறியதால், தனது ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அதிர்ச்சி  அளித்தார்.

இதனால் எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சரிய தொடங்கியுள்ளன. இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published.