வேலூரில் பிரபல இனிப்பகத்தில் பரபரப்பு திருட்டு… சில்லறை திருடர்கள் சிக்கியது எப்படி?

வேலூரில் பிரபல இனிப்பகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து லாக்கரில் 21 மூட்டைகளில் வைத்திருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் 1 ரூபாய், 2 ரூபாய், மற்றும் 5 ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய நாணயங்களை திருடிச் சென்ற அந்த கடையின் முன்னாள் ஊழியர் உட்பட இரண்டு பேரை கைது செய்து வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அருகே ஆரணி சாலையில் பிரபல இனிப்பகம் (சுவாமி ஸ்வீட்ஸ்) செயல்பட்டு வருகிறது. கடந்த நான்காம் தேதி திங்கட்கிழமை இரவு கடையை கடைசி மூடி சென்ற ஊழியர்களுக்கு மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது.

5-ம் தேதி காலை கடையை திறக்க வந்தவர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதையும் கடையின் உள்ளே பொருட்கள் சிதறி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு கடை ஊழியர்கள் புகார் அளித்தனர்.

இதனை எடுத்து வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த கடையில் உள்ளே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில் இந்த இனிப்பகத்தில் கடந்த 5-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் குரங்குகளை போல் கடையின் உள்ளே அங்கும், இங்கும் தாவி குதித்து சல்லடை போட்டு தேடியவர்களுக்கு சிக்கியது.

ஏதோ சில்லறை நாணயங்கள் மட்டுமே. இனிப்பாகத்திற்கு வரும் வாடகை வாடிக்கையாளர்களுக்கு சில்லறை வழங்குவதற்காக கடையின் உரிமையாளர் வங்கிக்கு சென்று அங்கிருந்து ஐந்து ரூபாய் இரண்டு ரூபாய் மற்றும் ஒரு ரூபாய் புத்தம் புதிய நாணயங்களை 18 சாக்குப் பைகளில் வாங்கி லாக்கரில் வைத்திருந்தார்.

6 சாக்கு மூட்டைகளில் தலா 12,500 ரூபாய் மதிப்பில் ரூபாய்க்கு 5 ரூபாய் நாணயங்களும், 5 சாக்கு மூட்டைகளில் தலா 5,000 ரூபாய் மதிப்பில் ரூபாய்க்கு 1 ரூபாய் நாணயங்களும், 10 சாக்கு மூட்டைகளில் தலா 2,500 ரூபாய் மதிப்பில் 1 ரூபாய் நாணயங்களும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது. கட்டுக்கட்டாக பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வந்த கொள்ளையர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இருப்பினும் கடையின் உள்ளே இருந்த லாக்கரை உடைத்து 18 மூட்டைகளில் இருந்த சில்லறை நாணயங்களை கடை பின்புறம் இருந்த கானாற்றின் வழியாக டெம்போ உதவியுடன் கடத்திச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார். வேலப்பாடி சுற்றுவட்டாரத்தில் பதிவான கண்காணிப்பு கேமராக்களையும் இனிப்பகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபர் அந்த கடையில் சில மாதங்களுக்கு முன்பு வரை ஊழியராக பணியாற்றிய விஜயகுமார் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து வேலப்பாடியை சேர்ந்த விஜயகுமார் (24) மற்றும் தொரப்ப்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில்லறை நாணயங்களை உருக்கும் வட மாநில கும்பலுக்கும் இந்த திருட்டில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை எடுத்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் உள்ள இனிப்பகத்தில் சில்லறை காசுகளை துணிகரமாக டெம்போ மூலம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வேலூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…