திருமணத்திற்கு மறுத்த இளம் பெண் கழுத்தறுத்து கொலை; காதலன் தப்பியோட்டம்!

மதுரை,பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவை சேர்ந்த பாண்டி மகள் அபர்ணா (வயது 19) என்ற இளம்பெண் அவரது வீட்டில் இன்று மாலை மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக எஸ் .எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அபர்ணா பிளஸ் டூ படித்து வந்த போது விராட்டிபத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த போது அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்துள்ளதாகவும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அபர்ணாவை திருமணம் செய்து கொள்ள அவர் வீட்டிற்கு ஹரிஹரன் பெண் கேட்டு வந்த நிலையில் அபர்ணா பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடத்த கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பெண் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில் ஹரிகரன் கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாகவும் ஹரிஹரன் தப்பி ஓடியதை கொலையுண்ட அபர்ணாவின் தாய் பார்த்ததாவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய ஹரிஹரனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் தான் காதலித்த பெண்ணை காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…