போக்சோ குற்றங்கள்; தமிழக நிலவரம் குறித்து நீதிபதி ஆனந்தி விளக்கம்!

POCSO

வட இந்தியாவை விட தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் குறைந்துள்ளதாக நீதிபதி ஆனந்தி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆனந்தி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு செய்து கலந்துரையாடினார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு நீதிபதி பதிலளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீதிபதி ஆனந்தி பேசுகையில்…

பழிவாங்குவதற்காக போக்சோ சட்டங்களை பயன்படுத்துவது என்பது தற்போது அரிதாகிவிட்டது. 99 % போக்சோ சட்டங்களை பழிவாங்குவதற்காக பயன்படுத்துவது இல்லை. போக்சோ சட்டங்களில் காவல்துறை நல்ல முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது, புகார்தாரரிடம் மாஜிஸ்திரேட் அறிக்கை பெற்றுக் கொள்கிறார், பாதிக்கப்பட்டவர்களிடம் மருத்துவ சோதனை விரைவாக நடைபெறுகிறது.

எனவே வட இந்தியாவை விட தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் குறைந்துள்ளது என பேட்டியளித்தார். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் ஷோபனா, மாணவ – மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.