கேரளாவில் மிட்நைட் சேல்..!! மக்கள் வெள்ளத்தில் மாட்டி தவிக்கும் கொரோனா..!!

கேரளாவில் பிரபல லுலு மாலில் மிட்நைட் சேல் (Midnight sale) என்ற பெயரில் கிட்டத்தட்ட மாலில் உள்ள அனைத்து கடைகளிலும் 50 சதவிகிதம் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் பலரும் ஆஃபரில் பொருட்களை வாங்குவதற்கு லுலு மாலுக்கு படையெடுத்திருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோக்கள் பலவும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதை கண்டித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் சார்பில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நேரத்தில் லுலு மால் நிர்வாகம் மிட்நைட் சேல் என்ற பெயரில் எண்ணிலடங்கா மக்கள் கூட்டத்தை 

இதனை கண்ட இணையவாசிகள் பலரும் கேரளாவில் கருப்பு நாள் இது என்றும், கொரோனா பரவல் முற்றுப் பெறாத நிலையில் லுலு மால் நிர்வாகம் இத்தகைய அறிவிப்பு விடுத்தது பொறுப்பற்ற நிலையை காட்டுகிறது என குறிப்பிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.