இந்தியாவில் விமான சேவையை தொடங்க போகும் ஆகாச ஏர் நிறுவனம்..!!

உலகம் முழுக்க கொரோனா கால முடக்கத்திற்கு பின் உலகில் விமான போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் ஆகாச ஏர் நிறுவனம் தொடங்க போவதாக அறிவித்துள்ளது. 

அதற்கான முயற்சியில் முக்கிய நகர்வாக ஆகாச ஏர் நிறுவனம் தனது சேவையை தொடங்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆகாசா ஏர் நிறுவனத்தின் அறிக்கையில், ஆகாச ஏர் தனது சேவையை தொடங்க AOC சான்று கிடைத்துள்ளது. 

Akasa Air to begin operations from July: All you need to know about Rakesh  Jhunjhunwala-backed airline

இதற்கு உதவி செய்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த மாத இறுதியில் எங்கள் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இதற்காக உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்தின் மூலம்  737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க போவதாக  ஆகாச ஏர் ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல் கட்டமாக 18 விமானங்களையும் மொத்தம் 72 விமானங்களையும் வாங்க ஆகாச ஏர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.